தமிழ்நாடு

தமிழகத்தில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

webteam

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது.

சென்னையில் பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில், கிண்டி, வடபழனி, பல்லாவரம், கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதே போல், புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது. பின்னர், சென்னை நகரில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதேபோல், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு போன்ற பகுதிகளில் மாலை நேரத்தில் தொடங்கிய சாரல் மழை, இரவிலும் நீடித்தது. திருவள்ளூரில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. சென்னை, வேலூர், திருவள்ளூர் உட்பட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் மழை பெயததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.