புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகப் பகுதிகளில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், நாளை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருக்காட்டுப்பள்ளியில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.