தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று மழை பெய்யும்!

webteam

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக இரவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்துவருகிறது. சென்னையில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, ’வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யலாம்’ என்று தெரிவித்துள்ளனர்.