தமிழ்நாடு

சென்னை உட்பட தமிழகத்தில் மழை!

சென்னை உட்பட தமிழகத்தில் மழை!

webteam

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், மண்ணடி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் அவதிப்பட்டு வந்த திருவாரூர் மாவட்ட மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இதேபோல், நாகை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.