தமிழ்நாடு

நீலகிரியில் மழை: பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரியில் மழை: பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

webteam

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. 

பவானிசாகர் அணையின் முக்கிய நீராதாரமாக மாயாறும், பவானியாறும் உள்ளன. அவலாஞ்சி, மேல்பவானி, தெங்குமரஹாடா ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், இந்த இரண்டு அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால், பவானிசாகர் அணையின் நீர் அளவு 4 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து, 43 அடியாகவுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் சித்தன்குட்டையை தூர்வாரும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆற்றின் வழியாகவே லாரிகள் சென்று வர வேண்டும் என்பதற்காக தற்காலிகமாக வண்டல் மண் எடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.