தமிழ்நாடு

சென்னையில் பல இடங்களில் மழை - மக்கள் மகிழ்ச்சி 

சென்னையில் பல இடங்களில் மழை - மக்கள் மகிழ்ச்சி 

webteam

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், சிட்லப்பாக்கம், அண்ணாநகர், சாலிகிராமம், வில்லிவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் ஆவடி, மதுரவாயல், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.