மத்திய மேற்கு வங்கக் கடலில் பகுதியில் உள்ள 'Amphan| புயலால் வட மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது. சென்னையில் பரவலாக நேற்றிரவு மழை பெய்தது. பம்மல் உள்ளிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. கனமழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதேபோல், காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, வந்தவாசி சாலை, உத்தரமேரூர் சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் திருத்தணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கடுமையான கோடை வெப்பத்தில் கொதித்துக் கொண்டு இருந்த வேலூர் சாரல் மழையால் குளுகுளுவென மாறியது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. சாரல் மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவியது.