கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி,ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்டபகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துஓடியது.
புறநகர் பகுதிகளான தாம்பரம்,பல்லாவரம், அனகாபுத்தூர், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.