சென்னை நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இது கத்திரி வெயில் காலம் என்பதால் வெயில் உச்சபட்சமாக காணப்படுகிறது. பல இடங்களில் அனல்காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வெப்பம் சற்று குறைவாகவும், வானம் மேக மூட்டத்துடனும் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.