சென்னையில் சேப்பாக்கம், மெரினா கடற்கரை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வந்தது. மேலும் இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் சேப்பாக்கம், மெரினா கடற்கரை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.