அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி,மின்னல்,சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் சற்று அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூரில் நேற்று வெயில் 110 டிகிரி பாரன் ஹீட்டைத் தாண்டியது.
இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிளவக்கல் பகுதியில் 4 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.