தமிழ்நாடு

நாளை முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

நாளை முதல் 2 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

நிவேதா ஜெகராஜா

நாளை முதல் 2 நாள்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அடுத்த இருநாள்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே இன்றைய தினம் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் பகுதி மற்றும் ஆந்திர கடல்பகுதிக்கு நாளை முதல் மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தென்கிழக்கு அரபிக்கடல், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லகூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.