செய்தியாளர்: ஆனந்தன்
பொதிகை அதிவிரைவு ரயில், இன்று காலை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, ரயிலில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது, கேட்பாரற்றுக் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் உடைமைகள் இருந்துள்ளன. இதையடுத்து அதை கைப்பற்றிய போலீசார் காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து கட்டுப்பாட்டு அறைக்கு ரயில் பயணி ஒருவர் போன் செய்து, தென்காசியில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் மூலமாக வந்ததாகவும், அப்போது தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய போது பையை மறந்து விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பயணியை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரவழைத்து தொலைத்த நகை பையை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பயணி நன்றி தெரிவித்தார் இதன்பின் தவற நகை பையை அவரிடம் ஒப்படைத்தனர்.