74 வது சுதந்திர தினவிழாவையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ரயில்வே வெடிகுண்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவினர் சோதனை.
74 வது சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்வே வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் ஆயுதம் தாங்கிய போலீசார் 20க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நாட்டின் 74வது சுதந்திர தின விழாவில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாவன்னம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்திய நாட்டின் 74வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது இந்த விழாவின் பாதுகாப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு போலீசார், சிறப்பு படை போலீசாருடன் ரயில்வே வெடிகுண்டு பாதுகாப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர், மற்றும் சோதணை கருவிகளுடன் பாம்பன் ரயில் பாலத்தின் ஆரம்பம் முதல் தூக்குபாலம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரயில் பாலம் மற்றும் சாலை பாலத்தில் அருகே மீன்பிடிக்கவோ அல்லது தேவையிலாமலோ மீனவர்கள் மற்றும் அந்நியர்கள் யாரும் வரக்கூடாது எனவும், தேவையின்றி சுற்றக் கூடாது எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் பாலத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவருவது பாம்பன் மற்றும் தீவுப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.