தமிழ்நாடு

`வருத்தத்துடன் பெரியார் மண்ணிலிருந்து பிரிந்து செல்கிறேன்' - கேரளா சென்றார் ராகுல் காந்தி!

`வருத்தத்துடன் பெரியார் மண்ணிலிருந்து பிரிந்து செல்கிறேன்' - கேரளா சென்றார் ராகுல் காந்தி!

webteam

பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்வதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்திய ஒற்றுமை யாத்தரையை கன்னியாகுரியில் தொடங்கிய ராகுல் காந்தி தொடர்ந்து 4 நாட்களாக தமிழகத்தல் தனது பயணத்தை முடித்துக் கொண்டு கேரள மாநிலத்திற்குச் சென்றார். அங்கிருந்து தனது பயணத்தை ராகுல் காந்தி இன்று தொடங்கவுள்ளார்.

தமிழகத்தில் தனது யாத்திரையை நிறைவு செய்த அவர், தமிழக எல்லையான தளச்சான் விளையில் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “இந்த பயணத்தில் ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. இந்தியாவை சாதி மத மொழி அடிப்படையில் பாஜக பிளவு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மோடி நன்மை செய்கிறார். ஊடகங்களையும் கையில் எடுத்து இதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பயணம்.

பெரியார் மண்ணில் இருந்து வருத்தத்துடன் பிரிந்து செல்கிறேன். நாராயண குரு, பெரியார் ஏழை மக்களுக்கு உழைத்தவர்கள். அனைவருக்கும் நன்றி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துவிட்டு கேரளா சென்றார்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமையாத்திரையை  நான்காவது நாளாக ஏழு மணிக்கு  முளமூட்டில் இருந்து துவங்கிய ராகுல் காந்தி சாமியார்மடம், இரவிபுதூர்கடை வழியாக மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் வந்து சேர்ந்தார். அங்கு வைத்து  மீனவர்கள் உட்பட பல தரப்பு மக்களை சந்தித்தார்.