குடியரசு தினம் என்பது சர்வாதிகரமற்ற, மன்னராட்சி அல்லாத சுதந்தரமானதாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டின் 68 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். யார் மீதும் எந்த ஒருவரும் தங்கள் கொள்கையை திணிக்காத வகையில் அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டின் நலிந்த பிரிவினரின் குரலும் கேட்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பினரின் சுதந்தரத்தையும் குடியரசு தினம் உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.