கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பள்ளி மாணவர்களுடன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடனமாடினார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை முளகுமூடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அப்போது மாணவி ஒருவர் கேட்டுக்கொண்டதால் சிறிது நேரம் மேடையில் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் அங்கிருந்த மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.