தமிழ்நாடு

ராதாராஜன் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ராதாராஜன் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

webteam

விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை‌ எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் பேசியதாக, ராதாராஜன் மீது ‌கடந்த 30ஆம் தேதி பெண் வழக்கறிஞர் சங்கத்தினர் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்திரன் முன்னிலையில் விசார‌ணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஆதிலட்சுமியிடம் வழக்கு தொடர்பாக நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், இந்த வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.