R Sudhakar is new NCB deputy director-general for south region pt web
தமிழ்நாடு

தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு NCB-ல் கூடுதல் பொறுப்பு யார் இந்த சுதாகர்?

தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு NCB-ல் கூடுதல் பொறுப்பு யார் இந்த சுதாகர்?

திவ்யா தங்கராஜ்

ஐபிஎஸ் அதிகாரியான சுதாகருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு ( NCB ) சென்னை மண்டல துணை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. யார் இந்த சுதாகர், அவருடைய அதிகார வரம்பு என்ன என பார்க்கலாம்.

2003-ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஆர். சுதாகருக்கு, சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) துணை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய துணை இயக்குநர் பதவியில் இருக்கும் டி.ஜி. வெங்கடேஷ், புதுதில்லியில் உள்ள NCB தலைமையகத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சுதாகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது வடகிழக்கு பிராந்தியத்தின் துணை இயக்குநராக பதவி வகித்து வரும் ( central anti-drug agency’s DDG, North East Region ) சுதாகர், இந்த ஆண்டு மார்ச் மாதம் கவுகாத்தியில் பொறுப்பேற்றார். ராணிப்பேட்டையில் உதவி காவல் கண்காணிப்பாளராக ( assistant superintendent of police )

தனது பணியைத் தொடங்கிய சுதாகர், பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார். தர்மபுரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பணியாற்றிய சுதாகர், சென்னை அடையாறு மற்றும் புளியந்தோப்பில் துணை காவல் ஆணையராகவும் பணியாற்றினார்.

2007 ஆம் ஆண்டில்,டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்ற பின்னர் சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் (வடக்கு), போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் இணை ஆணையர் (கிழக்கு) போன்ற பதவிகளில் இருந்தார். மதுரை ரேஞ்சின் டிஐஜியாகவும் பணியாற்றிய சுதாகர், பின்னர் மேற்கு மண்டலத்தின் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்றார். இதனை அடுத்து, சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல துணை துணை இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதை அடுத்து, சுதாகர் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் அதிகார வரம்பைக் கொண்டிருப்பார்.