தமிழ்நாடு

ஐபிஎல் போராட்டத்திற்கு எதிராக ஆர்.ஜே பாலாஜி வீடியோ

ஐபிஎல் போராட்டத்திற்கு எதிராக ஆர்.ஜே பாலாஜி வீடியோ

webteam

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பல்வேறு அமைப்புகளும், கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேப்பாக்கத்திற்கு அருகில் உள்ள வாலஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இந்நிலையில், போராட்டத்திற்கு எதிராக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். ‘ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தால் என்னைப் போன்ற சிலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால், ஐபிஎல் எதிர்ப்பை கைவிட்டு வேறு வழியில் போராடலாம்’ என அந்த வீடியோவில் கூறியிருந்தார். மேலும், காவிரி பிரச்னைக்காக இன்றைய கமண்ட்ரி வேலையையும் புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோப் பதிவு போராட்டத்திற்க்கு எதிராக உள்ளதால், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.