புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் வீட்டுக்குள் நுழைய வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பபை பொதுமக்கள் பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்யை சுற்றியுள்ள கிராமங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் திருமயம் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோழி ஒன்றை விழுங்கி விட்டு நகர முடியாமல் கிடந்த அந்த மலைப்பாம்பை கிராம மக்களே பத்திரமாக பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்பு அந்த பாம்பை வனத்துறையினர், மிதிலைப்பட்டி காட்டுக்குள் விட்டனர்.