தமிழ்நாடு

புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

Rasus

புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 8 வார்டன்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், முற்கட்டமாக 6 கைதிகளை வேறு வேறு சிறைகளுக்கு மாற்றியது சிறைத்துறை. இந்த நிலையில், சிறைத்துறை  ஏடிஜிபி அசுதோஷ் சுக்லாவின் உத்தரவின் பேரில் புழல் சிறையின் தண்டனை பிரிவில் வார்டனாக இருந்த 8 பேர் வேறு வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தலைமை வார்டன் விஜயராஜ் ஊட்டி கிளைச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மற்றொரு தலைமை வார்டன் கணேசன் செங்கம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார். வார்டன்கள் பாவாடை ராயர், ஜெபஸ்டின் செல்வக்குமார், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வக்குமார், பிரதாப் சிங் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மேலும், விசாரணை தொடரும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.