2026 சக்தி விருதுகள் வென்றவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் | 10ஆவது ஆண்டாக சாதனை பெண்களுக்கு அங்கீகாரம்!

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் 6 பிரிவுகளில் சாதனை பெண்களுக்கு வழங்கப்பட்டன. திறமை, துணிவு, கருணை, புலமை, சாதனை மற்றும் தலைமையில் சிறந்த பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் வழங்கப்பட்டன.

PT WEB

புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் ஆண்டுதோறும் சாதனைப் பெண்களை கவுரவித்து வழங்கப்பட்டு வருகிறது. 10ஆவது ஆண்டாக சக்தி விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், திறமை, துணிவு, கருணை, புலமை, சாதனை மற்றும் தலைமை ஆகிய 6 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

திறமைக்கான சக்தி விருது: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு வழங்கப்பட்டது.

Karthika

துணிவுக்கான சக்தி விருது: இந்தியாவின் முதல் பெண் மெரைன் பைலட் என்ற வரலாற்றைப் படைத்த ரேஷ்மா நிலோஃபர் விசாலாட்சிக்கு துணிவுக்கான சக்தி விருது வழங்கப்பட்டது.

ரேஷ்மா நிலோஃபர் விசாலாட்சி

தலைமைக்கான சக்தி விருது: தொழுநோயாளிகள் வாழும் குடியிருப்புகளில் வீட்டுவசதி திட்டங்களை முன்னெடுத்த விமென்ஸ் இந்தியன் அசோசியேஷன் என்ற பெண்கள் அமைப்பின் தலைவர் பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது

பத்மா வெங்கட்ராமன்

கருணைக்கான சக்தி விருது ; மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக போராடிவரும் குழந்தை நல மருத்துவர் ஐஸ்வர்யா ராவ், கருணைக்கான சக்தி விருதை பெற்றார்.

ஐஸ்வர்யா ராவ்

புலமைக்கான சக்தி விருது: தெலங்கானா மாநில தலைமைச் செயலகத்தை வடிவமைத்த கட்டடக் கலைஞர் டாக்டர் பொன்னி ஆஸ்கருக்கு வழங்கப்பட்டது.

பொன்னி ஆஸ்கர்

சாதனைக்கான சக்தி விருது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்கு வழங்கப்பட்டது.

ஜெயஸ்ரீ வெங்கடேசன்

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகள், எழுத்தாளர்கள், திரைத் துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு விருதாளர்களைப் பாராட்டினர்.

சாதனைப் பெண்களை அங்கீகரிப்பது புதிய தலைமுறைக்கு பெருமை என புதிய தலைமுறை குழுமத் தலைவர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர், பெண்களின் மனவலிமை, விடா முயற்சி, துணிச்சல் ஆகியவற்றுக்கு புதிய தலைமுறை தலைவணங்குவதாக தெரிவித்தார். எண்ணற்ற தடைகள் இருந்தாலும், அதை தாண்டி வெற்றிபெறும் பெண்களே சாதனையாளர் விருது பெறுகிறார்கள் என சத்யநாராயணன் கூறினார்.