தமிழ்நாடு

மக்களின் பேராதரவுடன் 7-ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது புதிய தலைமுறை

மக்களின் பேராதரவுடன் 7-ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது புதிய தலைமுறை

Rasus

தமிழ் ஊடக உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய புதிய தலைமுறை மக்களின் பேராதரவுடன் இன்று 7-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

காலத்தின் கண்ணாடியாய் உண்மையை மட்டுமே ஒற்றை இலக்காக கொண்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கும் புதிய தலைமுறை அதே உத்வேகத்துடன்
7-ஆம் ஆண்டில் இன்று பயணத்தை தொடங்குகிறது. எதையும் சொல்லும் துணிவு... நேர்மை... நடுநிலை... துல்லியம்... எங்கும், எப்போதும். மக்களின் குரலாய் ஓங்கி ஒலிப்பதில், உறுதியாய் நிற்பதில் பெருமிதம் கொள்கிறது புதிய தலைமுறை.

ஆதரவு அளித்து வரும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், எல்லாவற்றும் மேலாக எங்கள் பயணத்தில் துணை நிற்கும் நேயர்களுக்கும்
, இணையதள வாசகர்களுக்கும் இந்த இனிய நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது புதிய தலைமுறை.