தமிழ்நாடு

“கோரிக்கையை ஏற்கும் கட்சிகளோடு கூட்டணி” - புதிய தமிழகம் அறிவிப்பு

“கோரிக்கையை ஏற்கும் கட்சிகளோடு கூட்டணி” - புதிய தமிழகம் அறிவிப்பு

webteam

தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி அமைக்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோருடன் கூட்டணி அமைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அது நடைபெறாதபட்சத்தில், இக்கோரிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சிகளை ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் கௌரவமான இடங்களை ஒதுக்க முன்வரும் பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காலம் என பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டுமே நடைபெறாவிட்டால், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிகம் வாழும் தென்காசி, நெல்லை உள்பட 20 மக்களவைத் தொகுதிகளிலும், ஒட்டபிடாரம் உள்பட 12 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைத்து தேர்தல் சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.