இதழியலில் 15 ஆண்டுகளை நிறைவுசெய்து, 16ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது புதிய தலைமுறை. 16ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு, முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், புதிய தலைமுறை தமிழ் மக்களின் நம்பிக்கையையும், நேசத்தையும் பெற்று திகழ்வதாக கூறியுள்ளார்.
காலமாற்றங்களுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வதோடு, அறம்சார் ஊடகமாக தனது பயணத்தைத் தொடர்ந்திட வேண்டுமென புதிய தலைமுறையை அவர் வாழ்த்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் முதன்மைக் காட்சி செய்தி ஊடகங்களில் ஒன்றான புதிய தலைமுறை, 16-ஆம் ஆண்டில்அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். காட்சி செய்தி ஊடகங்களில் தொடர்ந்துபல வெற்றிகளைப் பெறவும் வாழ்த்தியுள்ளார்.