மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெரும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து புதிய தலைமுறை நிகழ்ச்சி நடத்தி வருகிறது.
அந்தவகையில் தேனியில் உள்ள AL AZAR மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'மனதில் உறுதிவேண்டும்' நிகழ்ச்சி பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் AL AZAR மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
பள்ளியின் தாளாளர் நைனார் முகமது, பள்ளியின் முதல்வர் அகமது மீரான், புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சி மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.