தமிழ்நாடு

பெரம்பலூர்: 66 அரசு பள்ளி கட்டடங்கள் பயன்படுத்த தகுதியற்றவை என கண்டுபிடிப்பு

JustinDurai
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள 66 வகுப்பறை கட்டடங்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்றவை என புதிய தலைமுறை கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், இடித்து அகற்ற வேண்டிய நிலையில் உள்ள 66 வகுப்பறை கட்டடங்களின் விவரங்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் கேட்டபோது, புதிய தலைமுறைக்கு கிடைத்த தகவல்களை அவர் உறுதி செய்தார். அதன்படி, பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் 66 வகுப்பறைக் கட்டங்கள் இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் விசாரித்தபோது, பயன்படுத்த தகுதியற்ற கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இந்நிலையில், பள்ளிகளில் அசம்பாவிதம் நேரிடும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். நெல்லையில் உள்ள பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், பெரம்பலூரில் 66 அரசுப் பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள் பயன்படுத்த தகுதியற்றவை என வெளியாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.