தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: எண்ணெய் கழிவுகள் நிறுத்தம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: எண்ணெய் கழிவுகள் நிறுத்தம்

webteam

திருவாரூர் அருகே பாசனக் கால்வாயில் எண்ணெய்க் கழிவுகள் கலந்தது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, கழிவுகள் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாமாயில் நிறுவனத்தின் எண்ணெய்க் கழிவுகள் அருகே உள்ள பாசன வாய்க்காலில் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் ‌குற்றம்சாட்டியிருந்தனர். அந்த பாசனக் கால்வாயை நம்பி 300 ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கால்வாய் முழுவதும் எண்ணெய்க் கழிவுகள் நிரம்பியிருப்பதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருப்பதாகக் விவசாயிகள் கூறியிருந்தனர். 

இதுதொடர்பா‌க செய்தி புதிய தலைமுறை செய்தி ஒளிபரப்பு செய்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எண்ணெய்க் கழிவுகள் பாசனக் கால்வாயில் கலக்காதவாறு எண்ணெய் குழாயை மூடினர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.