தமிழ்நாடு

மத்தியில் பாஜகவைவிட காங். ஆட்சியே தமிழகத்துக்கு சிறப்பு - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு

மத்தியில் பாஜகவைவிட காங். ஆட்சியே தமிழகத்துக்கு சிறப்பு - புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு

webteam

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழகத்தில் கூடுதல் நன்மை கிடைத்தது என்று தமிழக மக்களில் பெரும்பாலானோர் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக அரசு தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகளை செய்திருப்பதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 22.87% பேர் ஆம் எனவும், 60.03% பேர் இல்லை எனவும், 7.09% பேர் வேறு கருத்துகளையும், 10.01% தெரியாது/ சொல்ல இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.