தமிழ்நாடு

வாக்களிப்பு முடிவை தீர்மானிப்பதில் விலைவாசி உயர்வுக்கு முதலிடம்: கருத்துக்கணிப்பில் தகவல்

வாக்களிப்பு முடிவை தீர்மானிப்பதில் விலைவாசி உயர்வுக்கு முதலிடம்: கருத்துக்கணிப்பில் தகவல்

webteam

விலைவாசி உயர்வே வாக்களிக்கும் முடிவை தீர்மானிக்கும் என புதிய தலைமுறையின் மக்கள் கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த பிரச்னை உங்களின் வாக்களிக்கும் முடிவை தீர்மானிக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,

வேலையிழப்பு - 6.24%
விலைவாசி உயர்வு - 32.01%
தமிழ் கலச்சார பாதுகாப்பு - 1.72%
தேசிய வாதம் - 0.85%
பொருளாதார நிலைமை - 10.07%
வேலைவாய்ப்பின்மை - 9.94%
மதசார்பின்மை - 1.92%
ஆட்சி மாற்றம் - 8.26%
வேறு கருத்து - 23.48%
தெரியாது / சொல்ல இயலாது - 5.49% என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.