அதிமுகவில் இணைவது குறித்து விரவில் அறிவிப்பேன் என அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
டிடிவிதினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து புகழேந்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “அதிமுகவில் இணைவது குறித்தும் அரசியல் பற்றியும் முதல்வர் பழனிசாமியிடம் பேசவில்லை. அதிமுகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன். இடைத்தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன். மாமியார் வீடு சேலத்தில் இருப்பதால் அருகில் உள்ள முதலமைச்சர் வீட்டுக்கும் சென்று தீபாவளி வாழ்த்து கூறினேன்” எனத் தெரிவித்தார்.