அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்த அறிக்கையில், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.

திரு. புகழேந்தி ( கழக செய்தி தொடர்பாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். pic.twitter.com/Zjzt6QYNnr
— AIADMK (@AIADMKOfficial) June 14, 2021

முன்னதாக, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்து இருந்தார். மேலும் அந்தப் பேட்டியில், “ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஓபிஎஸ் அவர்கள் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்.பி ஆக உள்ளார். எனவே அவர்கள் தவறாக ஒரு கட்சியை பற்றி பேசக்கூடாது, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாமக தோற்றுவிட்டதாக சொல்வதை ஏற்க முடியாது.
பாமக வலுவாக உள்ள பகுதிகளில் எல்லாம் முழுவதுமாக அதிமுக தோற்றுள்ளது, எனவே அவர்கள் எங்கள் தலைவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் முடிவுக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது. 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.