தமிழ்நாடு

தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வங்கியில் குவிந்த மக்கள்..!

தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வங்கியில் குவிந்த மக்கள்..!

webteam

புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள வங்கிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் குவிந்தனர்.

நாடு முழுவதும் மூன்றாவது முறையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வால் புதுக்கோட்டையில் பிரதான சாலையாக உள்ள கிளை ராஜ வீதியில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

அப்பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பணம் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளை செய்ய ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறி தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் என்னதான் அறிவுறுத்தி வந்தாலும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று வங்கியில் பரிவர்த்தனை செய்ய சென்று வருகின்றனர்.