தமிழ்நாடு

ஓட்டை வழியாக கொட்டிய மழைநீர்.. அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்

ஓட்டை வழியாக கொட்டிய மழைநீர்.. அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்

kaleelrahman

அன்னவாசல் அருகே மழை பெய்தபோது அரசு பேருந்தின் ஓட்டை வழியாக மழைநீர் வழிந்ததால் பயணிகள் குடை பிடித்தவாறு பேருந்தில் பயணித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பல பேருந்துகள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர் வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பகுதிகளில் மழை பெய்தது.

இதில், பேருந்தின் மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பேருந்தில் குடை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர்.

இதை ஒரு சிலர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிதலமடைந்த பேருந்துகளுக்கு பதிலாக மாற்று பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.