புதுக்கோட்டை மக்களுக்கு 30,000 ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் போலி விளம்பரத்தால், காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அந்த லிங்கை பயன்படுத்த வேண்டாம் எனவும், தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் போலி விளம்பரம் பரவி வரும் நிலையில், புதுக்கோட்டை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாசகத்துடன் கூடிய லிங் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள நிலையில்,பொதுமக்கள் யாரும் அந்த லிங்கை பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டாம் என புதுக்கோட்டை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மீறிபயன்படுத்த முற்படும் போது தனிப்பட்ட மற்றும் வங்கி விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படும் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.