செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர், ஸ்ரீ தர்மசம் வர்த்தினி கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருந்த நிலையில், மழை வந்ததால் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது.
இதையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வந்திருந்த பொது மக்களுக்கு அன்னவாசல் இஸ்லாமியர்கள் வெஜிடேபிள் பிரியாணியை அன்னதானமாக வழங்கினர். இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாத நோன்பு வைத்துள்ள நிலையில், கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வந்திருந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.