நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்காக சிறப்பான முறையில் வளர்க்கப்படும் நாட்டின காளைகள் - சிறப்புகள், விலை என்ன?

PT WEB

ஜல்லிக்கட்டில் சிறப்புற செயல்பட்டு வளர்ப்போருக்குப் பெருமை தேடித் தரும் புதுக்கோட்டை நாட்டின மாடுகள் குறித்து காணலாம்.

ஜல்லிக்கட்டில் களம் காணும் காளைகளில் உயரம் குறைவான காளைகளாக அறியப்படுகின்றன புதுக்கோட்டை, நாட்டின மாடுகள். இவை பெரும்பாலும் 3 முதல் 4 அடி உயரம் வரையே இருக்கும் எனக் கூறுகின்றனர் காளை வளர்ப்போர்.

ஒன்று முதல் ஒன்றரை அடி வரையிலான கொம்புகளைக் கொண்டிருக்கும் மாடுகள் வளர்ப்போரிடம் குழந்தையைப்போல் பாசம் காட்டும் என்கின்றனர். அதே நேரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்புடன் சீறிப்பாய்ந்து யாரையும் பக்கம் வரவிடாமல் வெற்றிகளைத் தேடி தருபவை இவ்வகைக் காளைகள் என்பது வளர்ப்போரின் கூற்றாக இருக்கிறது.

தமிழகத்தில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படும் இவ்வகை மாடுகளை வாங்குவதில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டுவதாகக் கூறுகின்றனர். புதுக்கோட்டை நாட்டின மாடுகள் 5 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது என்று அதனை வளர்ப்போர் கூறுகின்றனர்.