தமிழ்நாடு

கத்தியால் கையில் திமிங்கலம் வரைய முயன்ற புதுச்சேரி இளைஞர் மீட்பு

கத்தியால் கையில் திமிங்கலம் வரைய முயன்ற புதுச்சேரி இளைஞர் மீட்பு

webteam

புதுச்சேரியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் ப்ளூவேல் விளையாட்டின் பிடியிலிருந்து போலீசாரால் மீட்கப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் வாட்ஸ் - அப் இணைப்பு மூலம் ப்ளூவேல் விளைாயட்டை கடந்த 20 நாட்களாக விளையாடி வந்துள்ளார். இவருக்கு ப்ளூவேல் அட்மினால் தினமும் அதிகாலை 2 மணிக்கு சவால்கள் அளிக்கப்பட்டு வந்துள்ளன. அட்மின் உத்தரவின்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சுடுகாட்டிற்கு சென்ற அலெக்சாண்டர் செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். அலெக்சாண்டரின் நடவடிக்கைகளை கண்ட அவரது சகோதரர் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். 

இதையடுத்து அவரது வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த போலீசார், கத்தியால் தனது கையில் திமிங்கலத்தின் வரைபடத்தை வரைய முற்பட்ட  அலெக்சாண்டாரை தடுத்து நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர், சுடுகாட்டிற்கு சென்று செல்ஃபி எடுத்ததாகவும், வீட்டில் இருந்த யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ப்ளூ வேல் விளையாட்டிலிருந்து வெளியேற போலீசார் அலெக்சாண்டருக்கு கவுன்சிலிங் அளித்ததாக காவல்துறை அதிகாரி ரெட்டி தெரிவித்துள்ளார்.