புதுச்சேரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்த பிரபல ரவுடி கண்ணாடி மற்றும் ஷூ அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சோழன் புதுச்சேரி மத்திய சிறையில் உள்ளார். இவர் கொலை வழக்கின் விசாரணைக்காக சிறையில் இருந்து புதுச்சேரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது கூலிங் கிளாஸ் மற்றும் ஷூ அணிந்துகொண்டு, அங்கிருப்பவர்களை பார்த்து பிரபலம் போல் கை அசைத்துக்கொண்டு வந்தார்.
அப்போது அங்கிருந்த ரவுடியின் ஆதரவாளர் ஒருவர், ‘தர்பார்’ படத்தில் வரும் ரஜினியின் பாடலைக்கொண்டு ‘டிக் டாக்’ எடுத்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நேற்றைய தினம் சிறைச்சாலைக்குள் நடத்திய சோதனையில், 11 செல்போன்கள் கைதிகள் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு வந்த ரவுடி புது மாப்பிள்ளை போல அழைத்து வரப்பட்டது சிறை நிர்வாகத்தின் மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.