கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் "கந்த சஷ்டி கவச" பக்திப்பாடலை ஆபாசமாக சித்தரித்ததால் தமிழக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரைத்தேடி வந்தனர், இந்நிலையில் புதுச்சேரி போலீசாரிடம் சரணடைந்த சுரேந்தரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி போலீசார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் அவர் உரிய இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, அரியாங்குப்பம் பகுதியில் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது மற்றும் முகக் கவசம் அணியாமல் இருந்ததற்காக மனவெளி கிராம நிர்வாக அதிகாரி செல்வி அளித்த புகாரின்படி சுரேந்தர் மற்றும் அவருடன் இருந்த 5 க்கும் மேற்பட்டவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.