புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்த விருந்தை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி புறக்கணித்துள்ளார்.
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்காக முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் விருந்து நிகழ்ச்சிக்கு செல்லாமல் நாராயணசாமி புறக்கணித்துள்ளார். அவர் மட்டுமின்றி அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் விருந்தை புறக்கணித்துள்ளனர். அத்துடன் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்துள்ளனர். கிரண்பேடி மற்றும் நாராயணசாமி இடையே அதிகார மோதல்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.