தமிழ்நாடு

6 வயது சிறுமியின் உயிரைப் பறித்த பூங்கா கதவு

6 வயது சிறுமியின் உயிரைப் பறித்த பூங்கா கதவு

webteam

புதுக்கோட்டையில் நகராட்சிப் பூங்காவின் இரும்புக்கதவு விழுந்து 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வடவாளம்‌‌ பகுதியைச்‌ சேர்‌‌‌‌‌‌‌‌‌‌ந்‌த பிரான்சிஸ் சவரிமுத்து என்பவர், தனது 6வயது மகள் எஸ்தர் மற்றும் மகனுடன் காந்தி பூங்காவுக்குச் சென்றுள்ளார். மூவரும் பூங்காவிலிருந்து வெளியே வரும்போது திடீரென இரும்புக் கதவு உடைந்து விழுந்தது. இதில் சிக்கிய சிறுமி எஸ்தர், தந்தை மற்றும் அண்ணன் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தார். 20 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, நகராட்சிக்குச் சொந்தமான இந்த காந்தி பூங்கா, 6 மாதங்களுக்கு முன்னர் தான் செப்பனிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரும்புக் கதவு உடைந்து விழுந்து சிறுமி பலியாகியிருப்பது, பூங்காவின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிறுமி உயிரிழக்க நகராட்சியின் அலட்சியமே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.