உத்திரமேரூர் அருகே கல் குவாரிகளை மூடக்கோரி, கிராம மக்கள் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள பழவேரி கிராமத்தில் ஏற்கனவே பல கல்குவாரிகள் உள்ள நிலையில் குடியிருப்புகளுக்கு அருகே புதிதாக கல் குவாரி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், மயானத்தில் தங்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
இதனையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட கல் குவாரி மீண்டும் திறக்கப்பட்டதால் 300க்கும் மேற்பட்டோர் குவாரி உரிமையாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரின் அனுமதி பெற்றே குவாரி நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்ததை அடுத்து, பழவேரி மக்கள் ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று வட்டாட்சியரின் காலடியில் வீசினர். தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.