தமிழ்நாடு

கிரண்பேடியை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சி

கிரண்பேடியை முற்றுகையிட பொதுமக்கள் முயற்சி

webteam

புதுச்சேரியில் கள ஆய்வுக்கு சென்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே உள்ள பண்டை சோழ நல்லூரில் இன்று காலை கிரண்பேடி கள ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் திடீரென கிரண்பேடியை முற்றுகையிட முயன்றனர். அத்துடன் இலவச அரிசி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் அலட்சியம் காட்டுவதாகப் புகார் தெரிவித்து, கிரண்பேடியை திரும்பிப் போகச் சொல்லி கோஷங்கள் எழுப்பினர். 

இதனால் முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுல்லு ஏற்பட்டது. கிரண்பேடியும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே அரசியல் மோதல் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.