டெங்கு காய்சலை ஒழிக்க அரசுடன், மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் தூய்மை ரத சேவையை தொடக்கி வைத்து பேசி அவர், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொருவரும் தூய்மையை கடைபிடித்து, மகிழ்ச்சியாக வாழவும் முதலமைச்சர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
முதற்கட்டமாக தூய்மை சேவை ரதம் சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விழாவில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வயிற்றுப்போக்கு தடுப்பு திட்டமான ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டுமருந்து முகாமும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட 11 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.