தமிழ்நாடு

சாப்ட்டது 75 ரூவா.. ஜிஎஸ்டி 13.50 ரூவா... இண்டர்நெட்டில் பரவும் ஹோட்டல் பில்கள்

சாப்ட்டது 75 ரூவா.. ஜிஎஸ்டி 13.50 ரூவா... இண்டர்நெட்டில் பரவும் ஹோட்டல் பில்கள்

webteam

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் காரணமாக உணவகங்களில் 5% முதல் 18% வரை விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஹோட்டலில் சாப்பிட்ட பில்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் உணவகங்களில் புதுவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறிய ரக உணவகங்களில் 5 சதவீதம் விலை கூடியுள்ளது.

குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களில் 12 சதவீதமும், குளிர்சாதன வசதியுள்ள உணவகங்களில் 18 சதவீத விலையும் உயர்ந்துள்ளது.

இதனால் ஹோட்டலில் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளவர்களுக்கு அதிகப்படியான செலவு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.