தமிழ்நாடு

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை பார்வையிட தடை!

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை பார்வையிட தடை!

Sinekadhara

சென்னையில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப் பணித்துறை தடை விதித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம், சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நினைவிடத்தை கடந்த மாதம் 27-ஆம் தேதி அலைகடலென திரண்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூழ முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

ஏராளமான பொதுமக்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை பார்வையிட்டு வந்த நிலையில், தற்போது அந்த நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித் துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா போன்றவற்றில் இறுதிக்கட்ட பணி நடைபெறுவதால் தடை விதித்துள்ளதாக பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது.