தமிழ்நாடு

15,16,17-ஆம் தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் அனுமதியில்லை: தமிழக அரசு

15,16,17-ஆம் தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் அனுமதியில்லை: தமிழக அரசு

Sinekadhara

வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவும் அபாயத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தடை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 15,16 மற்றும் 17 தேதிகளில் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா கடற்கரை உட்பட அனைத்து பொது இடங்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.