தமிழ்நாடு

சென்னை: ஆதம்பாக்கம் சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய விடாமல் பொதுமக்கள் போராட்டம்!

sharpana

சென்னை ஆதம்பாக்கம் அருகே சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தில் எரிவாயு எரியூட்டு மயானம் உள்ளது. அதனை சுற்றியுள்ள மக்கள் இங்கு தகனம் செய்வது வழக்கம். தற்போது கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வழக்கமாக தகனம் செய்வதை விட அதிகமான உடல்கள் தினந்தோறும் தகனம் செய்வதாகவும், இதனால் உருவாகும் புகை அப்பகுதியில் சூழ்ந்தும், வீடுகளின் அருகில் கருப்பு கருப்பாக துகள்கள் விழுவதாகவும் கூறி இன்று தகனம் செய்யவந்த உடல் ஒன்றை தகனம் செய்ய விடாமல் சுடுகாட்டை பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆதம்பாக்கம் போலீசார் சந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு. சுடுகாட்டில் புகை செல்வதற்கு 20 அடி உயரத்திற்கு குழாய் போன்று அமைத்து புகையை வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். இதனை போலீசார் அதிகாரிகளிடத்தில் கொண்டு சென்று உடனடியாக புகை செல்ல குழாய் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.